RSS
Write some words about you and your blog here

மனித வாழ்க்கையின் நிழல் இலக்கியம்


மனிதனின் அல்லது மனித வாழ்க்கையின் நகல் அல்லது மறுபதிப்பே இலக்கியம் எனலாம்.
ஆறறிவு படைத்த மனிதனின் தலையாய சிறப்பு யாதெனில் ;
அறிதலும் அறிவித்தலும்,
உணர்தலும் உணர்தலும் ஆகும்.
அப்படியானால் அசலின் பண்பே நகலிலும் நிழலாடல் இயற்கை.
இதன் நகலே இலக்கியமாக மாறி , பல்வேறு காரணங்களாலும் சுவையும் பயனும் உடையதாகிறது.

தொல்காப்பியம் களவு -கற்பு

இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள்

அகத்துறையில் காதல் இன்பத்தைத் துய்ப்பதில் களவு,கற்பு என்ற இருவேறு நிலைகள் உள்ளன.

களவு
பிணி,மூப்புகளின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய்
உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமை உடையவராய்
தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும்
அடுப்பவுமின்றி ஊழ்வகையால் தாமே எதிர்பட்டுக் கூடுவது.
தமது மகள் பிறருக்கு உரியவள் என்று இருமுதுகுரவரால் (பெற்றோர்கள்) கொடைஎதிர்தார்க்குரிய தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் சுரந்த உள்ளத்தோது எதிர்பட்டு புணர்தல் களவு எனப்பெயர் பெற்றது.
இக்களவு அன்போடு புணர்ந்ததாளின்
காமக்கூட்டம் என்றும் வழங்கப்பெறும்.
இன்னும் இதனை மறைந்த ஒழுக்கம்,மறை,அருமறை என்ற
சொற்களாலும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியம்-அன்பின் ஐந்திணை


தொல்காப்பியம் தமிழர் வாழ்வின் பல்துறைப்பற்றி அறிவதற்குத் துணைப்புரிகின்றது.தமிழ்மொழி ஒன்றின் கண்ணே காணப்படுவது அகம் புறம் என்னும் இருதிணைகளாகும்.
அகம் என்பது ஒருமித்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறக்கின்ற பேரின்பமாகும்.அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் நுகர்ந்த இன்பம் இவ்வாறு இருந்தது எனக்கூறப் படாததாய் யாண்டும் உள்ளது உணர்வாய் மட்டுமே நிற்கும் .
இத்தகைய காதல்உணர்வே அகப்பொருள் என அழைக்கப்பட்டது.
அகப்பொருளை ஏழுதிணைகளாகப் பிரிக்கின்றனர்.
அவை கைக்கிளை,குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,பெருந்திணை ஆகியன .

  • கைக்கிளை என்பது ஒருதலை காதல்.
  • பெருந்திணை என்பது தகாத காதல் அல்லது பொருந்தா காதல் .
  • இடையிலுள்ள ஐந்தும் உள்ளம் ஒன்றுபட்ட காதலர்களிடையே நிகழும் காதல் ஒழுக்கமாகும்.
ஆதலால் அவற்றை அன்பின் ஐந்திணை என்று அழைப்பர் .





தமிழுக்காக தமிழனாய் சிந்திப்போம்


" 'டாடி' என்றே அழைக்காதீர்; இனிமை தோய
தண்டமிழியல் 'அப்பா' வென் றழைத்தி டுங்கள்!
'மீடியா' என மொழிய வேண்டாம்; நல்ல
மென் தமிழில் 'ஊடகங்கள்' எனக்கூறுங்கள்!
'மூடில்லை' எனப்பேசல் வேண்டா,"மூளை
'முனைப்பில்லை' எனத்தமிழில் பேசிடுங்கள்!
பாடி என்றே சொல்லாதீர்;அழகாய் நந்தம்
பழந்தமிழில் 'உடல' மென்றே கூறிடுங்கள்!

'சூப்பர்' என்றே ஏன்கூறல் வேண்டும்?சொந்தச்
சுவைத்தமிழில் 'மிக நன்றே' என்றால் என்ன?
'பேப்பர்' என்றே ஏன்மொழிதல் வேண்டும்?பேசும்
பேச்சினிலே 'தாள்' என்றால் தவறா?

'மம்மி' என்றே பெரற்றவளைப் பிணமாக்காமல்
மதுத்தமிழால் 'அம்மா' வென் றழைத்தால் தப்பா?
'டம்மி' என்று கூறுவதை மாற்றி நத்தம்
தண்டமிழில் 'போலி' எனச் சொல்லக்கூடாதா?
செம்மொழியாய் நம்மொழியை அறிவித் தென்ன? என்று
'தமிங்கிலம்' பேசும் தமிழர்களை மிகக் கடுமையாக சாடு!

பாவேந்தர் கா.வேழவேந்தனார்
நற்றமிழ்
நளி 17-11-07

நாங்க ரொம்ப கெட்டி!!!

நாட்டை விட்டோம்! மொழியை விட்டோம்!
நம் பாரம்பரிய உணவுகளின் தமிழ் பெயரை விடலாமா?









50 ஆண்டுகளுக்கு முன்வரைத் தமிழ்நாட்டில் "சில்லா" என்ற அயல்மொழிப் பெயரே மாவட்டத்தைக் குறிக்கப் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப் பெற்று வந்தது.ஆனால் இன்று அச்சொல் வழக்கில் இல்லை.

அற்றே உணவுப் பொருட்களுக்கு வழங்கி வரும் அயல்மொழிப் பெயர்களை அகற்றி.ஏற்ற தமிழ் பெயர்களைஸ் சூட்ட வேண்டும்.

இட்டிலி,தோசை,அப்பம்,வடை,உப்புமா,அடை,களி,பிட்டு போன்ற தமிழ்ப் பெயர் தாங்கிய உணவுப் பொருள் வருசையில் மேலும் சில...................................


அயல்மொழிப் பெயர் - தமிழ்ப் பெயர்
அதிரசம் - மிகுசுவையம்
அல்வா - தேன்கூழ்
குலாப்ஜாமூன் - கோளகம்
கேசரி - கிளரி
சட்டினி - துவையல்
சப்பாத்தி - கோதுமை அடை
பகோடா - மாத்திரள்
பஜ்ஜி - உப்பி
பாயாசம் - பால்பாகு
புரூட் சாலட் - பழக்கூட்டு

தமிழ்வெளி

‘ஒரு நீர்த்துளி கடலில் கலந்ததும் தனது அடையாளத்தை இழந்துவிடுகிறது;

ஆனால் மனிதன் அப்படியில்லை.
மனிதன் தான் வாழும் சமூகத்திடம் தன் அடையாளத்தை இழந்துவிடுவதில்லை.
அவனது வாழ்க்கை சுதந்திரமானது.

அவன் சமூகத்தை வளம்பெறச் செய்யவும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவும் பிறந்தவன்!’

ஒளவையார்


சித்திரமும் கைப்பழக்கம்!
செந்தமிழும் நாப்பழக்கம்!
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம்
நடையும் நடைப்பழக்கம்!
கொடை,தயவு,நட்பு
இவை மூன்றும் பிறவி குணம்.