RSS
Write some words about you and your blog here

தொல்காப்பியம் களவு -கற்பு

இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள்

அகத்துறையில் காதல் இன்பத்தைத் துய்ப்பதில் களவு,கற்பு என்ற இருவேறு நிலைகள் உள்ளன.

களவு
பிணி,மூப்புகளின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய்
உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமை உடையவராய்
தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும்
அடுப்பவுமின்றி ஊழ்வகையால் தாமே எதிர்பட்டுக் கூடுவது.
தமது மகள் பிறருக்கு உரியவள் என்று இருமுதுகுரவரால் (பெற்றோர்கள்) கொடைஎதிர்தார்க்குரிய தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் சுரந்த உள்ளத்தோது எதிர்பட்டு புணர்தல் களவு எனப்பெயர் பெற்றது.
இக்களவு அன்போடு புணர்ந்ததாளின்
காமக்கூட்டம் என்றும் வழங்கப்பெறும்.
இன்னும் இதனை மறைந்த ஒழுக்கம்,மறை,அருமறை என்ற
சொற்களாலும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியம்-அன்பின் ஐந்திணை


தொல்காப்பியம் தமிழர் வாழ்வின் பல்துறைப்பற்றி அறிவதற்குத் துணைப்புரிகின்றது.தமிழ்மொழி ஒன்றின் கண்ணே காணப்படுவது அகம் புறம் என்னும் இருதிணைகளாகும்.
அகம் என்பது ஒருமித்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறக்கின்ற பேரின்பமாகும்.அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் நுகர்ந்த இன்பம் இவ்வாறு இருந்தது எனக்கூறப் படாததாய் யாண்டும் உள்ளது உணர்வாய் மட்டுமே நிற்கும் .
இத்தகைய காதல்உணர்வே அகப்பொருள் என அழைக்கப்பட்டது.
அகப்பொருளை ஏழுதிணைகளாகப் பிரிக்கின்றனர்.
அவை கைக்கிளை,குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,பெருந்திணை ஆகியன .

  • கைக்கிளை என்பது ஒருதலை காதல்.
  • பெருந்திணை என்பது தகாத காதல் அல்லது பொருந்தா காதல் .
  • இடையிலுள்ள ஐந்தும் உள்ளம் ஒன்றுபட்ட காதலர்களிடையே நிகழும் காதல் ஒழுக்கமாகும்.
ஆதலால் அவற்றை அன்பின் ஐந்திணை என்று அழைப்பர் .