
" 'டாடி' என்றே அழைக்காதீர்; இனிமை தோய
தண்டமிழியல் 'அப்பா' வென் றழைத்தி டுங்கள்!
'மீடியா' என மொழிய வேண்டாம்; நல்ல
மென் தமிழில் 'ஊடகங்கள்' எனக்கூறுங்கள்!
'மூடில்லை' எனப்பேசல் வேண்டா,"மூளை
'முனைப்பில்லை' எனத்தமிழில் பேசிடுங்கள்!
பாடி என்றே சொல்லாதீர்;அழகாய் நந்தம்
பழந்தமிழில் 'உடல' மென்றே கூறிடுங்கள்!
'சூப்பர்' என்றே ஏன்கூறல் வேண்டும்?சொந்தச்
சுவைத்தமிழில் 'மிக நன்றே' என்றால் என்ன?
'பேப்பர்' என்றே ஏன்மொழிதல் வேண்டும்?பேசும்
பேச்சினிலே 'தாள்' என்றால் தவறா?
'மம்மி' என்றே பெரற்றவளைப் பிணமாக்காமல்
மதுத்தமிழால் 'அம்மா' வென் றழைத்தால் தப்பா?
'டம்மி' என்று கூறுவதை மாற்றி நத்தம்
தண்டமிழில் 'போலி' எனச் சொல்லக்கூடாதா?
செம்மொழியாய் நம்மொழியை அறிவித் தென்ன? என்று
'தமிங்கிலம்' பேசும் தமிழர்களை மிகக் கடுமையாக சாடு!
பாவேந்தர் கா.வேழவேந்தனார்
நற்றமிழ்
நளி 17-11-07
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.